கத்தி திரைப்பட எதிர்ப்பு! விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்ளைச் சந்திக்கவுள்ளோம் – தமிழக மாணவர் அமைப்புகள்

July 23, 2014 // 0 Comments

சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாரிக்கப்படும் கத்தி திரைப்படத்தை வெளியிடக் கூடாது” என்று மாணவர்களின் அமைப்பான முற்போக்கு மாணவர் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர் முன்னணியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தினரையும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன் சுசீந்திரம் அடங்காத் தமிழன் இது பற்றி தமது முகநூல் பக்கத்தில்…. “தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாராகி இருக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்த உள்ளோம்.… ( மேலும் படிக்க - Continue Reading )

உறுப்பினர்கள் போதாமையினால் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!

July 23, 2014 // 0 Comments

இலங்கை நாடாளுமன்றில் போதியளவு உறுப்பினர்கள் பிரசன்னமாகாத காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வியாழக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் காரணத்தினால் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைத்துள்ளார். ஜூலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது. எனினும் பின்னர் போதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத காரணத்தினால், அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

1,000-ற்கும் மேற்பட்ட StubHub கணக்குகளை திருடிய இணைய திருடர்கள்.

July 23, 2014 // 0 Comments

நியு யோர்க்-1,000-ற்கும் மேற்பட்ட StubHub எனப்படும் ஈபே ஆன்லைன் சந்தை வாடிக்கையாளர்களின் கணக்குகளை இணைய திருடர்கள் திருடி மோசடித்தனமாக ஆன்லைன் ரிக்கெற் மறுவிற்பனையாளர்கள் மூலம் பல தரப்பட்ட நிகழ்வுகளிற்கான ரிக்கெட்டுகளை வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை நிறுவனத்தினரும் சட்ட அமுலாக்க அதிகாரிகளும் தெரியப்படுத்தி உள்ளனர். இது சம்பந்தமான சர்வதேச எல்லைகளை கடந்து பரந்த அளவிலான கைதுகள் எதிர்பார்க்கப்டுகின்றதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது சம்பந்தமாக கலந்துரையாட அவர்களிற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என அறியப்படுகின்றது. மன்ஹட்டன் மாவட்ட வழக்கறிஞர் Cyrus R. Vance Jr. . லண்டன் மற்றும் RCMP அதிகாரிகளுடன் ஒரு செய்தி மகாநாட்டை புதன்கிழமை நடாத்த எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

பேஸ்புக்கில் பதிவேற்றிய பின் இன்னொரு மாணவனும் தொங்கினார் தூக்கில்

July 23, 2014 // 0 Comments

நெல்லியடிப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நாகராசா சுதாகரனும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பின்னரே மரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றார்.“மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என அவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முதலாம் வருட மாணவனே இவ்வாறு பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு; நெல்லியடியில் சம்பவம்  யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து நெல்லியடி பொலிஸாரினால்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது!

July 23, 2014 // 0 Comments

சிங்களத்தால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நடைபெற்று 31 ஆண்டுகள் கடந்து செல்கின்றன. காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன. கறுப்பு யூலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல.அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலையாகும்.… ( மேலும் படிக்க - Continue Reading )

மன்னார் நகர சபை கூட்டம் ஒத்திவைப்பு-உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.

July 23, 2014 // 0 Comments

மன்னார் நகர சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற மாதாந்த பொதுக்கூட்டம் இடை நடுவே ஒத்திவைக்கப்பட்டதாகவும், சபை உறுப்பினர்கள் எவரும் சபைக்கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்யவில்லை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படவில்லை என கோரி மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.  இருதியாக மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமானதாக காணப்படும் 5 ஏக்கர் காணியினுள் தனி நபர் ஒருவர் அடாத்தாக உற்சென்று துப்பரவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த காணி நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த கூட்டத்தில் வழியுறுத்தப்பட்டது.  இந்த நிலையில் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் சபைக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கனடா டொரோண்டோவில் எழுர்ச்சியுடன் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு!

July 23, 2014 // 0 Comments

கனடா டொரோண்டோ ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட்சதுர்க்கத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமழர் தேசிய அவை மற்றும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியோர் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள்.… ( மேலும் படிக்க - Continue Reading )

எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை!

July 23, 2014 // 0 Comments

எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் பகுதியிலுள்ள 50 ஏக்கர் காணியின் உரிமையாளர் தம்பிராசா மகேஸ்வரி இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். யாழ்., மிருசுவில் ஆசைப்பிள்ளையேற்றத்திற்கு அருகில் படைமுகாம் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை சுவீகரிப்பதற்காக அதனை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவையாளர் திணைக்களத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) முன்னெடுக்கப்பட இருந்தது. இதனை, மகேஸ்வரியும், அவரது உறவினர்களும் இணைந்து போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தம்பிராசா மகேஸ்வரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கத்தி திரைப்பட எதிர்ப்பு! விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்ளைச் சந்திக்கவுள்ளோம் – தமிழக மாணவர் அமைப்புகள்

July 23, 2014 // 0 Comments

சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாரிக்கப்படும் கத்தி திரைப்படத்தை வெளியிடக் கூடாது" என்று மாணவர்களின் அமைப்பான முற்போக்கு மாணவர் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர் முன்னணியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தினரையும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன் சுசீந்திரம் அடங்காத் தமிழன் இது பற்றி தமது முகநூல் பக்கத்தில்.... "தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாராகி இருக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்த உள்ளோம்.… ( மேலும் படிக்க - Continue Reading )

காரைச் செலுத்தும் போது சாரதி உறங்கினால் எச்சரிக்கும் ஆசனப் பட்டி – ஸ்பெயின் விஞ்ஞானிகளால் உருவாக்கம்

July 23, 2014 // 0 Comments

காரைச் செலுத்தும் போது சாரதி உறுங்கினால் எச்சரிக்கும் ஆசனப் பட்டியொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.  ஸ்பெயினின் வலென்சியா நகரிலுள்ள உயிரியல் பொறியியல் நிறுவகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஹார்கென் என அழைக்கப்படும் இந்த ஆசனப் பட்டியிலுள்ள உணர்க் கருவிகள் சாரதியின் இருதய துடிப்பு மற்றும் சுவாச செயற்கிரமம் என்பற்றை கணிப்பிட்டு சாரதி உறங்கும் நிலைக்குச் செல்லும்போது எச்சரிக்கை ஒலியை பிறப்பிக்கின்றது. மேற்படி எச்சரிக்கை ஒலியை கேட்டு சாரதி விழிப்பு நிலைக்குத் திரும்பும் போது அந்த எச்சரிக்கை ஒலி சுய இயக்க அடிப்படையில் நின்று விடுகிறது.… ( மேலும் படிக்க - Continue Reading )

மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம்!

July 23, 2014 // 0 Comments

மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம் என்று வலியுறுத்தும் கையெழுத்துப் பெறும் கவனயீர்ப்பு நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை கறுப்பு யூலை இடம்பெற்று 31 வருடங்களை நினைவுகூரும் தினமான இன்று யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை நினைவுகூறும் வகையிலும், அவ்வாறானதொரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது எனக்கோரியுமே இந்தக் கையெழுத்து பெறும் நடவடிக்கையை சம உரிமை இயக்கத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கொழும்பில் ஐ.நாவைப் புரட்டியெடுத்து சிறிலங்காவுக்கு உற்சாகமூட்டிய இந்தியப் பேராசிரியர்

July 23, 2014 // 0 Comments

நேட்டோவின் ஒரு கருவியாக ஐ.நா மாறிவிட்டது என்று, இந்தியாவை ஆளும் பாஜகவைச் சேர்ந்த பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில், கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புவிசார் அரசியல் மற்றும் அனைத்துலக உறவுகளுக்கான பணிப்பாளரான, பேராசிரியர் மாதவ் நலபாட், யுனெஸ்கோவின் வன்முறையற்ற, அமைதிக் கலாசார ஊக்குவிப்பு அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார். அவர் தனது உரையில், ஐ.நாவின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார். “நேட்டோவின் பொதுசனத் தொடர்பாடல் நிலையமாக ஐ.நா மாறிவருகிறது. ஐ.நாவில் ஒன்றுமில்லை.… ( மேலும் படிக்க - Continue Reading )

175 ஈழ அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியாவைக் கோரவுள்ளது அவுஸ்ரேலியா!

July 23, 2014 // 0 Comments

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள 157 ஈழ அகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா இந்தியாவை கோரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்காக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.குறித்த 157 அகதிகளும் இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதியில் இருந்தே அவுஸ்திரேலியாவுக்கு பயணித்திருந்தனர்.தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களைச் சேர்ந்த அவர்களை இந்திய அரசாங்கம் மீண்டும் ஏற்று தமிழக முகாம்களிலேயே தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்கொட்மொரிசன் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் பொருட்டு அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இந்த வாரம் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் குறித்த அகதிகள் குறித்த பேச்சுவார்த்தையையேனும் நடத்த தாம் விரும்பவில்லை என்று இந்திய அரசாங்கம் அவுஸ்திரேலியாவிடம் அறிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.… ( மேலும் படிக்க - Continue Reading )

எமது விவசாய நிலங்களை கைப்பற்றி, அதில் இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர்

July 23, 2014 // 0 Comments

இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.கிருமிநாசினிகள் பயன்பாடு தொடர்பில் நாடாளுமன்றில்நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தவர்கள் அல்ல. தற்போது கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இயற்கை வளம் அழிவடைகின்றது.கிருமிநாசினி பயன்பாட்டினால் புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களும் ஏற்படுகின்றன. கிருமிநாசினி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். நல்ல பழங்கள் என நம்பி வீட்டுக்கு வாங்கிச் செல்கின்றோம். அதனை உட்கொள்ளும் சிறுவர் சிறுமியர் நோய் வாய்ப்படுகின்றனர்.எமது விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

July 23, 2014 // 0 Comments

23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர்.தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடி இயக்கிய லெப்.… ( மேலும் படிக்க - Continue Reading )

காண்டமிருக வேட்டையாடிய ஒருவருக்கு 77 ஆண்டுகள் சிறை

July 23, 2014 // 0 Comments

இந்த ஆண்டு மட்டும் 500க்கும் அதிகமான காண்டமிருகங்கள் கொலை செய்யப்பட்டுள்ளன   தென் ஆப்ரிக்காவில் காண்டாமிருக வேட்டையாடிய ஒருவருக்கு, இதுவரை இல்லாத வகையில் 77 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக காண்டாமிருகங்களைக் கொன்று, அதன் கொம்புகளை வெட்டி விற்பனை செய்யும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு, ஒரு பாடம் புகட்டும் நோக்கிலேயே இந்த அளவுக்கு மிக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் கொம்புகள், ஆசிய நாடுகளில் பெருந்தொகைக்கு விற்கப்படுகின்றன. இப்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்ட்லா சௌகேவுக்கு வேலை ஏதும் இல்லை. அவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை.… ( மேலும் படிக்க - Continue Reading )

உலகின் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில்: ஐநா

July 23, 2014 // 0 Comments

தி கர்ல் சம்மிட் என்ற பெயரில் யுனிசெஃப் மாநாடு ஒன்றை நடத்துகிறது. உலக அளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள், குழந்தையாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், அவ்வாறு சிறுமியாக இருக்கும் பொழுதே மணமகளாக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்வதாகவும் ஐக்கிய நாடுகளின் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெண் உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சாரகர்கள் உள்ளிட்டோர் பங்குபெறும் பிரிட்டன் அரசாங்கம் மற்றும் யுனிசெஃப் சேர்ந்து நடத்தும் ‘த கர்ல் சம்மிட்’ என்ற மாநாட்டில் யுனிசெஃப் இத்தகவல் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

பெங்களூரு சிறுமி பலாத்கார வழக்கு : பள்ளித் தலைவர் கைது

July 23, 2014 // 0 Comments

கோபாவேசத்தில் பெற்றோர் பெங்களூரில் பள்ளி ஊழியர்களால் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பள்ளியின் தலைவர் கர்நாடக மாநிலக் காவலதுறைனரால் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை மாலை ருஸ்டம் கேரவாலா எனும் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த வார இறுதியில் அந்தப் பள்ளியில் பணிப்புரியும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். அவரது மடிக் கணினியில் அநாகரீகமான வகையில் குழந்தைகள் தொடர்பான காணொளிகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாலியல் வல்லுறவு சம்பவம் கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி அன்று நடந்துள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

கறுப்பு யூலை: 31 வருடங்களைக் கடந்தும் நீளும் ஆக்கிரமிப்பு!

July 23, 2014 // 0 Comments

இலங்கை இயற்கையின் கொடையினால் தன்னகத்தே அழகிய அம்சங்களை எப்போதுமே கொண்டிருக்கிறது. மிகவும் சுவாத்தியமான சூழலும், வாழ்வாதாரத்தை தாங்கிப் பிடிக்கக் கூடிய பாரம்பரிய தொழில்களுக்கான வாய்ப்புகளும் நிறைந்திருக்கின்றன. இது, இலங்கை ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகாமல் அதன் போக்கில் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் அப்படியே தொடர்ந்திருக்கும். ஆனால், நிலைமை வேறுமாதிரியாகவே இருக்கின்றது.இந்தியப் படையெடுப்புக்களில் ஆரம்பித்து, ஐரோப்பியர்களின் ஆதிக்கம் வரை இலங்கை அதிக காலம் ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருந்து வந்திருக்கிறது. அது, பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பின்னும் உள்நாட்டு ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினங்களும், அவர்களின் தேசியமும் ஆக்கிரமிப்புக்குட்பட்டே வந்திருக்கிறது. இப்போதும், அதன் உட்சபட்ச ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருக்கிறது.இலங்கை தன்னுடைய வரலாற்றினை அதிகமாக கறுப்புப் பக்கங்களினால் எழுதி வைத்திருக்கிறது.… ( மேலும் படிக்க - Continue Reading )

மீனவர் பிரச்சனை: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்

July 23, 2014 // 0 Comments

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மோதியிடம் ஜெயலலிதா கோரிக்கை இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் இலங்கை வசம் இருக்கும் மீன் பிடிப் படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஜூலை மாதம் 16, 20 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதையும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஊழலை வெளிப்படுத்துவோருக்கு பாதுகாப்பு: இந்திய நாடாளுமன்றத்தில் தகவல்

July 23, 2014 // 0 Comments

ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் தகவல் முறைகேடுகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களும் ஊழல் முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களும் அரசின் மூலம் பாதுகாப்புப் பெறலாம் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களவையில் இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள பதிலில், இது தொடர்பான நடவடிக்கைகளை அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கொள்வாரகள் என்று கூறியுள்ளார். இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், புகார் வழங்கியோர் மற்றும் தகவல் தெரிவித்தவர்களுக்கு பாதுக்காப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிக்காட்டுதல்களை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதற்கான முகவர்கள் துறை வாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்களில் மத்திய அரசுக்குரிய சரத்துக்கள்; நீக்குமாறு ஆளுநர் பரிந்துரை!

July 23, 2014 // 0 Comments

வடக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட மூன்று நியதிச் சட்டங்களில், மத்திய அரசுக்குரிய அதிகார சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றை நீக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பரிந்துரை செய்துள்ளார். குறித்த பரிந்துரைகள் அடங்கிய கடிதத்துடன், மேற்படி நியதிச் சட்டங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணச் செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.வடக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச் சட்டம், முதலமைச்சர் நியதிச் சட்டம் மற்றும் முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம் ஆகியனவே மாகாணச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.வடக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட மேற்படி மூன்று நியதிச் சட்டங்களும், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் பரிசீலனைக்காக கடந்த ஜுன் மாதம் 6ஆம் திகதி வடக்கு மாகாண சபையினால் அனுப்பி வைக்கப்பட்டது.… ( மேலும் படிக்க - Continue Reading )

நான்கு இறக்கைகள் கொண்ட பறக்கும் டைனொசோர்

July 23, 2014 // 0 Comments

நான்கு இறக்கைகளைக் கொண்டு பறந்திருந்த புராதனப் பறவை ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயரப் பறப்பதென்பதை விட உயரத்திலிருந்து மிதந்து கீழிறங்க இந்த சிறகுகள் பயன்பட்டன. பின்னங்கால்களிலும் வாலிலும் நிறைய இறகுககளைக் கொண்டுள்ள இப்பறவைகளின் புதைபடிவங்கள் சீனாவில் லியவோனிங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 145 மில்லியன் ஆண்டுகள் முன்பிருந்து 66 மில்லியன் ஆண்டுகள் முன்பு வரையான கிரெடேஷியஸ் யுகத்தில் இந்தப் பறவைகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சங்யுரப்டொர் யாங்கி என்று இந்த வேட்டையாடும் பறவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. பறவை என்பதை விட இதனை பறக்கும் டைனொசொர் என்றுதான் சொல்ல வேண்டும், ஏனென்றால் சிறகடித்து உயரப் பறப்பது என்பதை விட மரங்களின் உச்சியிலிருந்து சிறகு விரித்து மிதந்து கீழிறங்கும் விதமான ஜந்துக்கள் இவை.… ( மேலும் படிக்க - Continue Reading )

யாழ் குடாவில் நிலங்களை கையகப்படுத்த இராணுவம் முயலுகிறதா

July 23, 2014 // 0 Comments

வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம் தேவைக்காக எடுக்கப்படவுள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்டபோது, அதனை காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம்களுக்காகப் புதிதாக காணிகள் சுவீகரிக்கப்படவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கொழும்பில் செய்தியாளர்களிடம் புதனன்று தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான ஒரு சம்பவம் அச்சுவேலியில் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆயினும் அச்சுவேலியில் இராணுவ முகாமுக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக சிலர் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அது உண்மைக்குப் புறம்பானது என்றும் இராணுவ பேச்சாளர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி!

July 23, 2014 // 0 Comments

தைவானில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரான்ஸ் ஆசியா என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 54 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, பெங்கு கவுன்டி என்ற பகுதியின் மேக்காங் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கும்போது விபத்துக்குள்ளானதாக தைவான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த விபத்தில் 51 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 17ஆம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது எடுத்த படம்… ( மேலும் படிக்க - Continue Reading )

இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் இலங்கையிலிருந்து செயற்பட யாருக்கும் அனுமதியில்லை: ஜீ.எல்.பீரிஸ்

July 23, 2014 // 0 Comments

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையிலிருந்து செயற்படுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் விமானங்கள் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும், இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்த கேள்வியென்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியப் பிரதமர்- இலங்கை ஜனாதிபதி இடையே செய்துகொண்ட கடிதப்பரி மாற்றத்துக்கூடாக இரு நாடுகளினதும் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய விடயங்களில் தத்தமது நிலப்பகுதியில் இடமளிப்பதில்லையென இணங்கியிருக்கிறது.எனினும், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் திருகோணமலை பகுதியில் எந்தவிதமான செயற்பாடுகளுக்கும் அனுமதிப்பதில்லையென அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.… ( மேலும் படிக்க - Continue Reading )

மோதல்களினால் அசையா சொத்துக்களை இழந்தவர்கள், அவற்றை மீளப்பெறுவதற்காக புதிய சட்டம்!

July 23, 2014 // 0 Comments

நாட்டில் நீடித்து வந்த மோதல்களினால் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்துள்ளது. ஆட்சியுரிமை (சிறப்பு ஏற்பாடுகள்) எனப்படும் இந்த புதிய சட்டமூலம் தொடர்பிலான விவாதம் கட்சி தலைவர்கள் தீர்மானிக்கும் ஒரு திகதியில் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படும்.மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலர் தமது காணிகளின் உரிமையை தொடர்ச்சியாக நிலைநாட்ட முடியாது போயிற்று. அந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினையில் சிக்கிகொண்டவர்களுக்கு அவர்களின் சொத்துக்கள் மீதான உரிமைகளை இந்த சட்டம் மீளப்பெற்று கொடுக்கும் .வடக்கு, கிழக்கில் மோதல்கள் காரணமாக தமது காணிகளை கைவிட்ட பலர் உள்ளனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

நெதர்லாந்தின் கோரிக்கையை அடுத்து MH 17 விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்ய பிரிட்டன் சம்மதம்

July 23, 2014 // 0 Comments

நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் ஜூலை 17 ஆம் திகதி உக்ரைன் வான் பரப்பில் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப் பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப் பட்டிருந்தனர்.இந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதில் முக்கிய பங்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவு கிளர்ர்சியாளர்களையே சாரும் என அமெரிக்காவும் சர்வதேசமும் குற்றம் சாட்டின.பதிலுக்குக் கிளர்ச்சியாளர்களும் ரஷ்யாவும் உக்ரைன் இராணுவத்தை சாடியிருந்தன. குறித்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2/3 பங்கு மக்கள் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

July 23, 2014 // 0 Comments

இலங்கையில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முறையான பொது செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்களும் மிகவும் கவலையடைவதாக கூறியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களும், ஏனைய இரு நாடுகளின் தூதுவர்களும் இணைந்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதனை கூறியுள்ளனர். தனிநபர்கள் தமது கருத்தை வெளியிடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்பன பொது விவகாரங்களின் பகுதி, அதில் தேவையற்ற தலையீடுகளை தவிர்த்து அந்த உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

வெல்லும்வரை செல்வோம் மாபெரும் ஆர்ப்பாட்டம் 23/07/2014

July 23, 2014 // 0 Comments

தமிழ் இனவழிப்புச் செய்த கொடுங்கோலன் ராஜபக்ச பிரித்தானியாவில் நடக்கும் பொதுநலவாய விளையாட்டுக்களில் தலைமை தாங்கவருவதை எதிர்த்தும் எமக்காக நீதி கேட்டும் பிரித்தானியா தமிழரின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று 23/04/2014 எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம் ஆர்ப்பாட்டம் நடைபெரும் இடம் BARROWFIELD STREET GLASGOW G40 3QZ ஆர்ப்பாட்ட ஒருங்கமைப்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா.… ( மேலும் படிக்க - Continue Reading )

பிரபல கலவன் பாடசாலை ஒன்றின் மாணவி காணாமற் போயுள்ளார்

July 23, 2014 // 0 Comments

கொழும்பு முகத்துவாரம் பகுதியிலுள்ள பிரபல கலவன் பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் காணாமற்போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.தரம் 10இல் கல்வி பயிலும் 15 வயதான மாணவி நேற்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என கிரிபத்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வத்தளை ஹுனுப்பிட்டியவைச் சேர்ந்த குறித்த மாணவி பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்திற்கு சென்றதை அங்கிருந்தவர்கள் கண்டதாக உறவினவர்கள் கூறுகின்றனர்.இதேவேளை, கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய மாணவியை கண்டுபிடிப்பதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதுவரை காணாமற்போன மாணவி தொடர்பிலான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கலைஞர் ஏ.டி.தேவதாசன் அல்மேடா அவர்களின் அகத்திலிருந்து

July 23, 2014 // 0 Comments

கலைஞனின் அகம் கணினியில் முகம் கணனியில் முகம் கலைஞனின் அகம் எனும் பகுதியின் இவ் வாரத்திற்கான படைப்பாளி கவிஞர், நாடக நடிகர், திரைப்பட நடிகர், நாடகஆசிரியர் மற்றும் நெறியாளர், சமாதான நீதவான், ஓய்வுபெற்ற தபாற் சேவகர்; என தன்னை சமூகத்திற்குரியவராக வளப்படுத்திக் கொண்டு இருக்கும் கலைஞர் ஏ.டி.தேவதாசன் அல்மேடா அவர்களின் இல்லத்தில்....• தங்களைப் பற்றி?மாண்புமிகு மன்னார் மாந்தை தெற்கு பரப்பான்கண்டல் கிராமம் தான் எனது சொந்த இடம். ஆரம்பக் கல்வியை பரப்பான்கண்டல் பாடசாலையிலும் உயர்கல்வியை புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையிலும் .கற்றேன். எனது தந்தை அந்தோனி அல்மேடா, தாய் லூர்த்தம்மாள்.… ( மேலும் படிக்க - Continue Reading )

இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நாடுகளையும் அனுமதிக்கப் போவதில்லை – பீரிஸ்

July 23, 2014 // 0 Comments

இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எந்த ஒரு நாட்டையும் சிறீலங்காவில் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறீலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இன்று (23-07-2014) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உரையாற்றி சிறீலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க உரையாற்றியிருந்தபோதும் அதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பீரிஸ் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றுப் போது: இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பிற நாடுகள் திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்த ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. இந்தியாவின் சுயாதீனத்திற்கும், நிலைப்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் சிறீலங்கா அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் இருக்கின்றார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய நெடுமாறன்

July 23, 2014 // 0 Comments

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் இருக்கின்றார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய  நெடுமாறன்http://feeds.feedburner.com/vivasaayi/QMzm… ( மேலும் படிக்க - Continue Reading )

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

July 23, 2014 // 0 Comments

23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.… ( மேலும் படிக்க - Continue Reading )

விமான பயிற்சி பாடசாலையாக மாறப் போகும் மத்தல விமான நிலையம்!

July 23, 2014 // 0 Comments

மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அண்மையில் வெளியிட்ட தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் எரோ ஸ்பேஸ் நிறுவனம் இலங்கையின் சீனேட் நிறுவனம் இணைந்து விமான பயிற்சி பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் இதற்கு இடத்தை ஒதுக்குமாறு மத்தல விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

விசாரணைக்குழுவுக்கு இலங்கை அரசு விசா வழங்கவேண்டும் – ராமதாஸ் வலியுறுத்து

July 23, 2014 // 0 Comments

— 23/07/2014 at 6:33 pm | no comments உலகத் தமிழர்களின் உணர்வை மதித்து, இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்; ஐ.நா. போர்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வழங்க மோடி அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டுவந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைவிடாத முயற்சி காரணமாக இலங்கை மீது ஐ.நா.… ( மேலும் படிக்க - Continue Reading )

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள பிரித்தானியா

July 23, 2014 // 0 Comments

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி 614 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் நடைமுறையில், 49.6 மில்லியன் பவுண்கள் ( 79 அனுமதிப்பத்திரங்கள்) மற்றும் 8.1 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கான (49 அனுமதிப்பத்திரங்கள்) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரியவந்துள்ளது. ஏனைய நாடுகளை விட இலங்கைக்கு அதிகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளமை தொடர்பில் குறித்த நாடாளுமன்றக் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் பதிலைப் பெற முயற்சித்து வருகிறது.… ( மேலும் படிக்க - Continue Reading )

தமிழர் கலாச்சார ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி

July 23, 2014 // 0 Comments

தமிழர் கலாச்சார ஒன்றியத்தினால் 19.07.2014 தென்மானிலம் ரீதியாக நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி தமிழீழத் தேசியக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய விளையாட்டுப் போட்டி 13 களகங்கள் பங்கு கொண்டு மிகவும் வீரதீரமாக எதிர்கொண்டு வெற்றிக்கிண்ணத்தை மேற்பிரிவில் Utsc Stuttgart கழகம் முதலாம் இடத்தையும் Tyn München இரண்டாம் இடத்தையும் Tsc Sindelfingen ழூன்றாம் இடத்தையும் கீழ்ப்பிரிவில் முதலாம் இடத்தையும் Tfc Nürnberg இரண்டாம் இடத்தையும் Mtsc München ழூன்றாம் இடத்தையும் Nürnberg United தட்டிச்சென்றார்கள். அதனை தொடர்ந்து 20.07.2014 அன்று நடாத்தப்பட்ட வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நூறன்பேர்க் இளையோர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் விளையாட்டப்போட்டி மிகசச்சிறப்பாக நடைபெற்றது.… ( மேலும் படிக்க - Continue Reading )

போலீஸ் அதிகாரிகளுக்கு மனஅழுத்தம் குறைய பயிற்சி

July 23, 2014 // 0 Comments

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதி காரிகளுக்கு மன அழுத்தம் குறைவதற்கான பயிற்சி முகாம் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் முத்துசாமி, முதல்வர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தொடங்கி வைத்து பேசினார். காவல் துறையில் பணி புரியும் அனைவருக்கும் தொழில் ரீதியான மற்றும் குடும்ப ரீதியான பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.… ( மேலும் படிக்க - Continue Reading )

வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்

July 23, 2014 // 0 Comments

வேதாரண்யத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக வீட்டிற்கு செல்லும் பாதையில் கொட்டகை கட்டி வைத்துள்ளதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தாலுக்கா அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(24). விவசாய கூலித் தொழிலாளி. இவர் மணக்காட்டைச் சேர்ந்த வேறொரு ஜாதியைச் சேர்ந்த சூர்யா(21) என்ற பெண்னை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். வேறு ஜாதியில் திருமணம் செய்துக் கொண்டதால் பத்மநாதன் வீட்டிற்கு செல்லும் பாதையை அன்பழகன் என்பவர் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஸ்கொட்லாந்து செல்ல அஞ்சினார் மஹிந்த!?

July 23, 2014 // 0 Comments

— 23/07/2014 at 6:25 pm | no comments ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கின்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவில் காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கான பயண ஏற்பாடுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கவில்லை என்றும் ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மகிந்த ராஜபக்ஷ கிளாஸ்கோ விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழ் அமைப்புகள் கிளாஸ்கோ நகரில் போராட்டம் ஒன்றையும் இன்று நடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.… ( மேலும் படிக்க - Continue Reading )

கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்

July 23, 2014 // 0 Comments

கனடா டொரோண்டோ ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட்சதுர்க்கத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள்.… ( மேலும் படிக்க - Continue Reading )

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்

July 23, 2014 // 0 Comments

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரக்கோரி, பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடந்த மோசடிகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங் களுக்கு பதிலாக, வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: மின்னணு வாக்குப்பதிவு மிகப்பெரிய மோசடியாகும்.… ( மேலும் படிக்க - Continue Reading )

மன்மோகனை மையப்படுத்தி அம்புகளை எய்வது நியாயமில்லை: ஞானதேசிகன்!

July 23, 2014 // 0 Comments

நீதிபதிகள் நியமனங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு முன்வைத்துள்ள குற்றச்சாட்டில், பிரதமர் மன்மோகன் சிங்கை மையப்படுத்தி அம்புகளை எய்வது நியாயமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இரண்டு நாட்களாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் அதிகமாக பேசப்படுவது உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் பற்றி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு வெளியிடட் தகவல்களின் அடிப்படையில் பாரத பிரதமர் அந்த நீதிபதியின் கால நீட்டிப்பை அளிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்தும் கூட, தலையிட்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது.… ( மேலும் படிக்க - Continue Reading )

தொழில்முனைவோருக்காக சிறப்பு வலைத்தளம்

July 23, 2014 // 0 Comments

2 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கென பிரத்யேக வலைத்தளம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், 2014-15 நிதியாண்டில், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், திருவள்ளூர், தருமபுரி ஆகிய 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா: “தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்வதற்கு 37 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 32 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.… ( மேலும் படிக்க - Continue Reading )

பிரிக்ஸ் மாநாட்டில் புதிய சம்பிரதாயத்தையே உருவாக்கிவிட்டோம்; சுஷ்மா சுவராஜ் பெருமிதம்

July 23, 2014 // 0 Comments

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது.  அப்போது பேசிய வெளியுறவுத்துறை மந்தரி சுஷ்மா சுவராஜ், ”ஆசியாவின் கிழக்கிலிருந்து மேற்கு வரை அனைத்து நட்பு நாடுகளின் உறவுகளையும் வளர்ப்பதில் இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், மோடி தலைமையில் புதிய அரசு இந்த விஷயத்தில் மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாக” கூறினார். 6-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டது குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா சுவராஜ், ”காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இதுவரை 5 பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கறுப்பு ஜீலை வேண்டாமெனும் பேரில் கையெழுத்து இயக்கம்

July 23, 2014 // 0 Comments

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாமெனும் பேரில் கையெழுத்து இயக்கமொன்றை சமவுரிமைகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளது. கையெழுத்து வேட்டை நிகழ்ந்த சூழலை இராணுவத்தினர் ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்க அதையும் தாண்டி பெருமளவிலான மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் திரண்டு வந்து தமது ஒப்பங்களை இட்டு ஆதரவை வெளிப்படுத்தியவாறு இருந்தனர். இலங்கையின் பலபகுதிகளிலும் அவர்கள் ஏற்கனவே இத்தகைய கையெழுத்து வேட்டையினில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.… ( மேலும் படிக்க - Continue Reading )

பெங்களூரு சிறுமி பலாத்கார வழக்கு : பள்ளித் தலைவர் கைது

July 23, 2014 // 0 Comments

பெங்களூரில் பள்ளி ஊழியர்களால் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பள்ளியின் தலைவர் கர்நாடக மாநிலக் காவலதுறைனரால் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை மாலை ருஸ்டம் கேரவாலா எனும் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த வார இறுதியில் அந்தப் பள்ளியில் பணிப்புரியும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். அவரது மடிக் கணினியில் அநாகரீகமான வகையில் குழந்தைகள் தொடர்பான காணொளிகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாலியல் வல்லுறவு சம்பவம் கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி அன்று நடந்துள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து சேவையாற்றுங்கள்

July 23, 2014 // 0 Comments

மேல்மாகாணத்தில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக களுத்துறை மாவட்டத்திற்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள  உங்கள் கைகளில், இன்று முதல் ஐந்து வருடங்களுக்கு இப்பிரதேசத்திலுள்ள ஏழை எளிய தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என நினைத்து சேவையாற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.மேல்மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் 136 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,கடந்த இரண்டு வருடங்களுக்குள் சுமார் 1000 தமிழ் ஆசிரியர் நியமனங்கள் மேல்மாகாணத்தில் வழங்கப்பட்டுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

மட்டக்களப்பில் மீன் பிடிக்க சென்ற மூவருள் ஒருவர் காணாமல் போயுள்ளார்

July 23, 2014 // 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற 03 பேரில் இருவர் காணாமல் போயுள்ளதாக அப்படகு உரிமையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், எஞ்சிய ஒருவர் படகுடன் கரைக்கு திரும்பியதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர். காவத்தமுனை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான யூசுப்லெப்பை தாஹிர் (வயது 38), வாழைச்சேனை மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஹமட் பௌசுதீன் அறபாத் (வயது 20) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

July 23, 2014 // 0 Comments

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் (வயது 21) தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து நெல்லியடி பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் “மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என்று அவர் பதிவிட்டுள்ளாராம். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

July 23, 2014 // 0 Comments

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர்.தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடி இயக்கிய லெப்.… ( மேலும் படிக்க - Continue Reading )

திரிபுராவில் பா.ஜனதா தலைவர்கள் மீது தாக்குதல்

July 23, 2014 // 0 Comments

திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுதீந்திர தாஸ்குப்தா, மாநில செயலாளர் தபாஸ் பட்டாச்சாரியா மற்றும் இரண்டு நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். சபாஹிஜலா மாவட்டம் தக்சின் மகேஷ்பூரில் நேற்று இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களைத் தாக்கியதாக தாஸ்குப்தா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களைப் பாதுகாக்கத் தவறிய மெய்க்காவல் படையின் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இதுபற்றி தாஸ்குப்தா கூறுகையில், “தக்சின் மகேஷ்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்ட எங்கள் கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வாகனத்தில் வந்தபோது கத்தி போன்ற ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

சிறீலங்காவில் மக்களுக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இல்லை – ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம்

July 23, 2014 // 0 Comments

சிறிலங்காவில் உள்ள மக்களுக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டிருந்த 7 கடற்படையினர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குறித்த இரண்டு சிறுமிகளுக்கும் நியாயம் மறுக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்காவில் சட்ட ஒழுங்குகள் சீர்குழைந்துள்ளமையையே எடுத்துக் காட்டுகிறது. அதேநேரம் அந்த சிறுமிகளின் பெற்றோரை கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர்.இதன் காரணமாக அந்த சிறுமிகளால் தங்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்களை அடையாளம் காட்ட முடியாமல் போயுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஈச்சங்குளத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் கொலை வழக்கில் எதிரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

July 23, 2014 // 0 Comments

வவுனியா ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் மொஹொஜிறின் மிஸ்கின் என்ற முச்சக்கர வண்டிச் சாரதி வெட்டுக்காயங்களுடன் ஒரு மரத்தடியில் இறந்து கிடந்த, கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் எதிரியில்லாத விளக்கத்தின் பின்னர், கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த எதிரி சிவன்சிவகுமார் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஈச்சங்குளம் காட்டுப்பகுதியில் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய மொஹொஜிறின் மிஸ்கின் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.… ( மேலும் படிக்க - Continue Reading )

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற உத்தியோகத்தர் திருவிழா

July 23, 2014 // 0 Comments

(உ.உதயகாந்த்) கடந்த 09-07-2014 புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவின் 14 ஆம் நாளைச் சிறப்பிக்கும் வகையில் நேற்று (22) நடைபெற்ற உத்தியோகத்தர் திருவிழாவினை திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் இணைந்து சிறப்புற நடாத்தினர். நேற்றையதினம் நடைபெற்ற பகல் மற்றும் மாலை நேரப் பூஜைகளின்போது இரு பிரதேச செயலகங்களதும் உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். பகல்நேரப் பூஜையின்போது சுவாமி உள்வீதி வலம் வந்த காட்சி பக்திப் பரவசமூட்டும் ஒரு நிகழ்வாக விளங்கியது.… ( மேலும் படிக்க - Continue Reading )

பிரிவினையினை தூண்டாத வகையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் தடையாக நிற்காது

July 23, 2014 // 0 Comments

நாட்டில் பிரிவினைவாதத்திற்கு துணை போகவில்லை என கூட்டமைப்பு கூறுவது முற்றிலும் பொய்யானதாகும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் இணக்கப்பாடொன்றினை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்கின்றதெனில் அது வரவேற்கத்தக்க விடயமே. பிரிவினையினை தூண்டாத வகையில் தொடர்ந்தும் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் ஒரு போதும் தடையாக நிற்காது. புலிகளுடன் இணைந்து தனி நாட்டுக் கோரிக்கைக்காக போராடிய தமிழ் தேசிய கூட்டமைப்பே இன்பரு நாட்டை பிரித்துத் தருமாறு கேட்கவில்லை என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் அமைதியை நோக்கி கூட்டமைப்பு நகர்கின்றதெனில் சம்பந்தனின் கருத்தில் உண்மை இருப்பின் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளும் ஆனால் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கூட்டமைப்பினர் செயற்பட முனைகின்றனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

வவுனியா மிஸ்கின் கொலை வழக்கு; கொலையாளிக்கு மரணதண்டனைத் தீர்ப்பு!

July 23, 2014 // 0 Comments

— 23/07/2014 at 4:24 pm | no comments வவுனியா ஈச்சங்குளம் காட்டுப்பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த மொஹொஜிறின் மிஸ்கின் (61) கொலை வழக்கில், எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.  ஓட்டோ சாரதியான மிஸ்கின் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவ தினத்தன்று வாடகைக்கு முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றதாக, அவருடைய மனைவியுடனான கடைசி உரையாடலின் போது தெரிவித்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.… ( மேலும் படிக்க - Continue Reading )

கிழக்கில் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா- வி.ரி.சகாதேவராஜா

July 23, 2014 // 0 Comments

கிழக்கில் கண்ணகி அம்மன் வழிபாடு இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு பின்ணிப்பிணைந்த ஒன்றாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள குக்கிராமங்கள்தோறும் கண்ணகி அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பக்தி பூர்வமாக அவ்விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கண்ணகி அம்மன் வழிபாட்டினையும், தமிழர் பண்பாட்டினையும் எடுத்து இயம்பு வகையில் கிழக்கில் ஒவ்வொரு வருடமும் கண்ணகி கலை இலக்கிய விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ் கண்ணகி கலை இலக்கிய விழா இம்முறை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம், 02ஆம், 03ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஆசிரியர்களுக்கான புதிய சம்பளத்திட்டம் 1.7.2008 முதல் அமுலுக்கு வரஉள்ளது!

July 23, 2014 // 0 Comments

ஆசிரியர் பிரமாணக்குறிப்பு புதிய பல திருத்தங்களுடன் வெளிவரவுள்ளது. அதற்கான புதிய சம்பளத்திட்டம் 1.7.2008 முதல் அமுலுக்குவரவுள்ளது.ஆனால் இப்புதிய சம்பளத்திட்டத்திற்கான சம்பள நிலுவைகள் 1.11.2011 முதல்தான் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. 1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திஸ்ஸ தேவேந்திர சம்பள ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் அன்றிலிருந்து இது அமுலுக்குவரவேண்டும். இன்றேல் ஆசிரிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பாரிய தொழிற்சங்கப்போராட்டத்தை நாடளாவியரீதியில் நடாத்த தயாராகவேண்டும். இவ்வாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் த.மகாசிவம் சங்கத்தின் இருநாள் கருத்தரங்கை நிறைவுசெய்துவைத்துப் பேசுகையில் சூளுரைத்தார். இச்செயலமர்வு திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க மகா வித்தியாலயத்தில் சங்கத் தலைவர்; வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது. … ( மேலும் படிக்க - Continue Reading )

யாழில் மாமி, மருமகளை கட்டிப் விட்டு ஒரு இலட்சம் கொள்ளை

July 23, 2014 // 0 Comments

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டு தேடி அதற்குள் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாவை கொள்ளை அடித்துக் கொண்டு வாகனத்தில் தப்பிச்சென்ற சம்பவம் யாழ். ஆனைக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வாகனத்தில் தப்பிச்சென்ற கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த நால்வரைக் கைது செய்த பொலிஸார் கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை பட்டப்பகல் 12 மணியளவில் ஒரு வாகனத்தில் வந்த கொள்ளைக் கோஷ்டியினர் சற்று தூரத்தில் வாகனத்தை மறைவாக விட்டுவிட்டு ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து மேற்படி வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் கட்டி போட்டு விட்டு அவர்கள் கூக்குரல் போடாத வகையில் வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டி விட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டுத் தேடி சுமார் ஒரு லட்சம் ரூபாவைக் கொள்ளையடித்துக் கொண்டு வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்று விட்டனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் ஊடாக முதலீடு:

July 23, 2014 // 0 Comments

ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் ஊடாக முதலீடு: இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று விசாரணை நடத்தும் குழுவின் பெயரை தற்போது வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது. மேற்படி பாகிஸ்தான் செல்வந்தர்களில் ஒருவர் சில காலம் பாகிஸ்தான் அமைச்சராக இருந்த சலீம் மெண்டிவிவாலா ஆவார், இவர் பாகிஸ்தான் முதலீட்டுச் சபையின் தலைவராகவும் இருந்துள்ளார். மற்றைய பாகிஸ்தான் செல்வந்தர் அமெரிக்க பிரஜையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய ஆதரவாளருமான இமாத் சுபைர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் செல்வந்தர் மூலம் அமெரிக்காவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

அலை செய்திகள் — Tamil News Protal

July 23, 2014 // 0 Comments

நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு அண்ணன் மனைவியின் புகாரை ஏற்று கோர்ட்டு உத்தரவு நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருடைய அண்ணன் மனைவி தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி, இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், சுந்தர புருஷன், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்பா. அவருடைய அண்ணன் பி.சீனிவாச ராவுக்கும், பல்லவி என்பவருக்கும் கடந்த 1999–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, பல்லவி, தன் கணவரைப் பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 23 இணைப்பாளர்கள்!

July 23, 2014 // 0 Comments

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இணைப்புச் செயலாளர் ஒருவருக்கு மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மாதமொன்றுக்கு 170 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகின்றது. பெற்றோல் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 30, 000 ரூபா கொடுப்பனவும், 5000 ரூபா தொலைபேசி கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. இதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் இணைப்புச் செயலாளர்களுக்காக மூன்று கோடி எழுபத்து ஆறு லட்ச ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

திருமணம் செய்வதாக மாணவியை ஏமாற்றி! பலாத்காரம் செய்த வாலிபர்

July 23, 2014 // 0 Comments

கோவை: கோவை புலியகுளத்தை அடுத்த அம்மன்குளத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 2ம் தேதி இரவு அந்த பெண் வீட்டில் இருந்த 32 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணத்துடன் மாயமானார். பெற்றோர் புகாரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.அதே நாளில், அவரது வீட்டருகே வசித்து வந்த சிம்சோன் (28) என்ற வாலிபரும் மாயமானது தெரிய வந்தது. சிம்சோனுக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். சிம்சோன் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

முஸ்லிம் வர்த்தக நிலையங்களைக் கொழுத்த சிறப்புக்குழு – மேர்வினிடமும் ஆலோசனை!

July 23, 2014 // 0 Comments

— 23/07/2014 at 3:52 pm | no comments வணக்கம், காளமேகம் செய்திகள், வாசிப்பவர் பொய்யாமொழி! முதலில் தலைப்புச் செய்திகள்! திரிபுபடுத்தப்பட்ட புத்தபெருமானின் போதனைகள் நிராகரிக்கப்பட்டு உண்மையான போதனைகள் கடைப்பிடிக்க வேண்டும் – வீர சிங்கள பௌத்த அமைப்புக்களின் ஒன்றிய வருடாந்த மாநாட்டில் தீர்மானம். ஊவா மாகாணசபைத் தேர்தலில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கக் கூடாது என்ற பவ்ரல் அமைப்பின் ஆலோசனைக்கு எதிராக மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் போர்க்கொடி. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேருவளை, அளுத்கம சம்பவங்களைச் சர்வதேச மயப்படுத்தவேண்டாமென அகில இலங்கை முஸ்லிம் கவுன்சிலிடம் கோரிக்கை.… ( மேலும் படிக்க - Continue Reading )

மன்னாரில் கைதான தமிழக மீனவர்கள் 20 பேருக்கும் விளக்கமறியல்!

July 23, 2014 // 0 Comments

மன்னார் கடற்பரப்பில் நேற்து முன்தினம் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார். தமிழகத்திலிருந்து 4 படகுகளில் வந்த 20 மீனவர்களை மன்னார் கடற்படையினர் கைது செய்து, கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கைதான மீனவர்களை நீரியல் வளத்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தினர். இதன்போது அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 188 total views, 188 views today… ( மேலும் படிக்க - Continue Reading )

கிளாஸ்கோ நோக்கி உணர்வுடன் அணி திரண்டுள்ள பிரித்தானிய வாழ் தமிழீழ மக்கள்!

July 23, 2014 // 0 Comments

ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரை நோக்கி பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் அணி திரண்டுள்ளனர். கொடுங்கோலனும் இனப்படுகொலையாளியுமான மகிந்த ராஜபக்ச இன்றைய நாளில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்காகப் பேருந்துகளிலும், மகிழுந்துகளில் மக்கள் உணர்வுடன் புறப்பட்டுள்ளனர். 9 மணி நேரத்திற்கு மேலான பயண நேரத்தையும் பார்க்காது அதிகாலையிலேயே எழுந்து தமது தாயகம் நோக்கிய கடமைகளைச் செய்வதற்காக மக்கள் அணி திரண்டுள்ளார்கள். 54 சர்வதேச நாடுகள் பங்கு பற்றும் இவ்விளையாட்டுப் போட்டியில் மகிந்த ராஜபக்சவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவடன், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை இனக் கலவரத்தையும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களையும் இன்றைய நாளில் நினைவேந்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.… ( மேலும் படிக்க - Continue Reading )

கூட்டமைப்பு கூறுவது பச்சப்பொய் : ஹெகலிய

July 23, 2014 // 0 Comments

நாட்டில் பிரிவினைவாதத்திற்கு துணை போகவில்லை என கூட்டமைப்பு கூறுவது முற்றிலும் பொய்யானதாகும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் :- நாட்டின் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் இணக்கப்பாடொன்றினை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்கின்றதெனில் அது வரவேற்கத்தக்க விடயமே. பிரிவினையினை தூண்டாத வகையில் தொடர்ந்தும் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் ஒரு போதும் தடையாக நிற்காது. புலிகளுடன் இணைந்து தனி நாட்டுக் கோரிக்கைக்காக போராடிய தமிழ் தேசிய கூட்டமைப்பே இன்பரு நாட்டை பிரித்துத் தருமாறு கேட்கவில்லை என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.… ( மேலும் படிக்க - Continue Reading )

பெற்றோல் நிரப்புநிலையத்திற்கு .மாநகர சபை இடைக்கால தடை ; எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்கு

July 23, 2014 // 0 Comments

பெற்றோல் நிரப்புநிலையத்திற்கு .மாநகர சபை இடைக்கால தடை ; எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்கு இந்திய எண்ணை கூட்டுத்தாபனத்தின் நிதியுதவியில்  யாழ்ப்பாணம் கச்சேரிப்பகுதியில் அமைக்கப்பட இருந்த பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு யாழ். மாநகர சபை வழங்கிய இடைக்கால தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். கிளையினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 23 ஜுலை 2014, புதன் 3:15 பி.ப   கருத்து [ 0 ]   Loading பிந்திய செய்திகள்   நெதர்லாந்தில் இன்று துக்க தினம்உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெதர்லாந்தில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.  … ( மேலும் படிக்க - Continue Reading )

பொதுமக்கள் குறைகேள் இணையம் ஆரம்பம்

July 23, 2014 // 0 Comments

அரச சேவையை பெற்றக்கொள்வதில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கும், சிறந்த உடனடி அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாக அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினாலேயே பொது மக்கள் குறைகேள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய இணையத்தளம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. www.complaints.gov.lk  என்ற  இந்த புதிய இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அரச தகவல் கேந்திர நிலையத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி குறித்த அரச நிறுவனங்களின் தேவைகளை முன்வைக்க முடியும்.  பொதுமக்களின் முன்வைக்கப்படும் தேவைகளுக்கான பதில் குறுந்தகவல் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாக சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு அறிவிக்கிறது.… ( மேலும் படிக்க - Continue Reading )

பேஸ்புக்கில் பதிவேற்றிய பின் இன்னொரு மாணவனும் தொங்கினார் தூக்கில்

July 23, 2014 // 0 Comments

நெல்லியடிப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நாகராசா சுதாகரனும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பின்னரே மரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றார்."மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்" என அவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முதலாம் வருட மாணவனே இவ்வாறு பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு; நெல்லியடியில் சம்பவம்  யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து நெல்லியடி பொலிஸாரினால்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.      … ( மேலும் படிக்க - Continue Reading )

நெதர்லாந்தில் இன்று துக்க தினம்

July 23, 2014 // 0 Comments

உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெதர்லாந்தில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அம்ஸ்ட்ரடம்மிலிருந்து கோலாம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் பயணித்த MH17 விமானம் கடந்த வியாழக்கிழமை இனம் தெரியாத ஆயுததாரிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களில் 193 பேர் நெதர்லாந்துப் பிரஜைகள் என்பது குறிப்பிடதக்கது.  விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் பணிகள் கடந்தவாரம் முதல் முன்னெடுக்கபடுவதுடன் இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட சடலங்கள் பரிசோதனைகளுக்கா ரயில்களில் கொண்டு செல்லப்படுவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

வேறு பெண்ணை திருமணம் செய்ததால் வெட்டி கொன்றேன்: கள்ளக்காதலி வாக்குமூலம்

July 23, 2014 // 0 Comments

சிதம்பரம், சப்–இன்ஸ்பெக்டர் கணேசனை வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி வனிதா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:– கிள்ளை போலீஸ் நிலையத்தில் கணேசன் சப்–இன்ஸ்பெக்டராக இருந்த போது ஒரு விவகாரம் தொடர்பாக கணேசனை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கும், அவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவருடன் சென்று இருக்கிறேன். இந்த நிலையில் கிள்ளை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வீடு எடுத்து தங்கினார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

மகிந்தரின் இரத்தப் பணத்திலா? விஜயின் கத்தி படம்! இந்திய மாணவர்கள் போராட்டம்

July 23, 2014 // 0 Comments

துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைந்துள்ள கத்தி படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனல் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி திரைப்படத்தை தயாரிப்பவர்களில் ஒருவரான லைகா மொபைல் அதிபர் சுபாஸ்கரனை ராஜபக்சேவின் கூட்டாளி என குற்றம்சாட்டி வருகின்றனர் இலங்கைத் தமிழர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்களும் இதையே வலியுறுத்தி வருகின்றனர். இதனால், கத்தி படத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி, சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களைச் அழைத்து, “லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என்ற தகவல், முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது” என்று மறுத்தார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற இருவரை காணவில்லை

July 23, 2014 // 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற 03 பேரில் இருவர் காணாமல் போயுள்ளதாக அப்படகு உரிமையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், எஞ்சிய ஒருவர் படகுடன் கரைக்கு திரும்பியதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். காவத்தமுனை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான யூசுப்லெப்பை தாஹிர் (வயது 38), வாழைச்சேனை மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஹமட் பௌசுதீன் அறபாத் (வயது 20) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

தெலுங்கானா மாநில தூதராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டார்

July 23, 2014 // 0 Comments

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27 வயதான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி தெலுங்கான மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சானியா மிர்சா கலந்து கொண்டு சிறப்பிப்பார். தொழிற்சாலை உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் சார்பில் ஐதராபாத்தில் நேற்று நடந்த தொழில் அதிபர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற முதல்-மந்திரி சந்திரசேகரராவ், தூதருக்கான நியமன கடிதத்தை சானியா மிர்சாவிடம் வழங்கினார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக போராட தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்

July 23, 2014 // 0 Comments

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக போராட தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தொடர்ந்தும் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை தாழ்த்தியும் புறந்தள்ளியும் வருகிறார். இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வருவதற்கு முன்னர் அமைச்சர்கள் கூடி இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர். அங்கு கருத்து தெரிவித்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.… ( மேலும் படிக்க - Continue Reading )

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள பிரித்தானியா

July 23, 2014 // 0 Comments

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி 614 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் நடைமுறையில், 49.6 மில்லியன் பவுண்கள் ( 79 அனுமதிப்பத்திரங்கள்) மற்றும் 8.1 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கான (49 அனுமதிப்பத்திரங்கள்) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரியவந்துள்ளது. ஏனைய நாடுகளை விட இலங்கைக்கு அதிகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளமை தொடர்பில் குறித்த நாடாளுமன்றக் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் பதிலைப் பெற முயற்சித்து வருகிறது.… ( மேலும் படிக்க - Continue Reading )

15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்

July 23, 2014 // 0 Comments

பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம், முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளம், முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தந்தை சாரதியாக தொழில் செய்வதாகவும், அவர் வெளியிடங்களுக்குச் சென்று தொழில் செய்வதாகவும், சிறுமி தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று சிறுமி அவசர தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றவேளை குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபர் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர் என பொலிஸாரது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

தேசிய இளைஞர் சேவைகள் இளைஞர் பாராளுமன்ற அமர்வை யாழ். உறுப்பினர்கள் புறக்கணிப்பு

July 23, 2014 // 0 Comments

யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்ற 9வது அமர்வைப் புறக்கணிக்கவுள்ளனர். கம்பகாவில் இடம்பெற்ற 26வது இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான கிறிக்கட் போட்டியில் யாழ் மாவட்ட அணியினர் தாக்கப்பட்டமை வீரர்களுக்கு இடையூறு விளைவித்தமை கீழ்த்தரமாக அம்பாந்தோட்டை மாவட்ட அணி நடந்துகொண்டமை ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவித்தும் தாக்கியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுமே இளைஞர் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளனர். இன்று யாழ்ப்பாணக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் படியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான கடிதங்கள் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அளகப்பெரும, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

மட்டு. வாவியில் சட்டவிரோத மீன்பிடி: 7 பேர் கைது

July 23, 2014 // 0 Comments

மட்டக்களப்பு, முகத்துவாரம் வாவியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் சுமார் 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் மீன்படி இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார். நேற்று (22) மாலை 7 மணிமுதல் இன்று (23) அதிகாலை 2 மணி வரை கடற்படையினரின் உதவியுடன் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர்கள் முகத்துவாரம் வாவியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இச்சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட வலைகள் இயந்திரங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

இரணைமடு யாழப்;பாணம் நீர் விநியோகத் திட்டம் விவசாய சமூகத்தின் மீது ஏற்படுத்தி உள்ள தாக்கம்.

July 23, 2014 // 0 Comments

(சிந்தனைக்கூட – ஆய்வு, அபிவிருத்தி – யாழ்ப்பாணம் எனும் நிறுவனத்தின் குழுநிலை ஆய்வுக்குழுவினரது பதிலுரைகள். தொகுப்பு : பேராசிரியர் இரா.சிவசந்திரன்) இரணைமடுக் கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினால் இரணைமடு யாழ்ப்பாணம் நீர் விநியோகத்திட்டம் ‘விவசாய சமூகத்தின் மீதான தாக்கம்’ எனும் தலைப்பில் கடந்த 19ஃ07ஃ2014ம் திகதியன்று கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் வழங்கப்பட்ட வினாக்கள். இவ்வாறான வினாக்கள் இவர்களால் பல இடங்களில் முன்வைக்கப்பட்டு இவற்றிற்கான பதில்கள் அவர்களுக்குப் புரியக்கூடிய வகையில் கூறப்பட்டிருந்தும் ஒரு சில விவசாயிகளால் இத்திட்டத்தைத் திசை திருப்பும் நோக்கில் வேண்டுமென்றே இவ்வாறான வினாக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களை குழப்ப நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றார்கள்.… ( மேலும் படிக்க - Continue Reading )

மட்டக்களப்பு மாவட்ட கடற்றெழில் பரிசோதகர்களினால் சட்டவிரோத வலைகள் மீட்பு

July 23, 2014 // 0 Comments

(சிவம்)மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட  சுருக்கு வலைகளையும்,  இயந்திரப் படகுகளையும் கல்லடி கடற்படையினரின் உதவியுடன் நேற்று வௌ;வாய்க்கிழமை மாலை கைப்பற்றியதாக மட்டக்களப்பு கடற்றெழில் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் தொமிங்கோ ஜோஜ் தெரிவித்தார்.நேற்று மாலை 2.00 மணி முதல் 7.00 மணிவரை நடாத்திய தேடுதலில்  3.6 மில்லியன் பெறுமதியான ஓன்பது சுருக்கு வலைகளையும், 1.8 மில்லியன் பெறுமதியான ஒன்பது இயந்திரப் படகு இயந்திரங்களையும் கைப்பற்றியதாக அவர் மேலும் தெரிவித்தார்.கடற்றெழில் திணைக்களத்தின்  பரிசோதகர்களான ரி. பாலமுகுந்தன், ரி. மனோகரன், ரி. அமிர்தலிங்கம், எஸ். ஐ.… ( மேலும் படிக்க - Continue Reading )

காதல் முறிவு: பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். மாணவன்

July 23, 2014 // 0 Comments

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நெல்லியடியை சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்னும் மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாணவனின் தற்கொலைக்கு காதல் முறிவே காரணம் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை தற்கொலை செய்து கொண்ட சுதாகரனுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.… ( மேலும் படிக்க - Continue Reading )

30ஆம் திகதிக்கு பின்னர் வகுப்புகளுக்கு தடை – பரீட்சைகள் திணைக்களம்

July 23, 2014 // 0 Comments

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பிலான முன்னோடி வகுப்புக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

இலங்கை வாழ் முஸ்லிம்களை பாதுகாக்க வெளிநாட்டு ஒத்துழைப்பு அவசியம்

July 23, 2014 // 0 Comments

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு குறித்த இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தவாஹிட் ஜமாத் அமைப்பின் கருத்துக்களுக்கு பௌத்த அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.இந்த அமைப்பு ஒர் பயங்கரவாத அமைப்பு என சிங்கள பௌத்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என தவாஹிட் ஜமாத் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு அளித்த நேர் காணலின் போது இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை வாழ் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஈச்சங்குள கொலையாளிக்கு மரண தண்டனை

July 23, 2014 // 0 Comments

வவுனியா ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் மொஹொஜிறின் மிஸ்கின் என்ற முச்சக்கர வண்டிச் சாரதி வெட்டுக்காயங்களுடன் ஒரு மரத்தடியில் இறந்து கிடந்த, கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் எதிரியில்லாத விளக்கத்தின் பின்னர், கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த எதிரி சிவன்சிவகுமார் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஈச்சங்குளம் காட்டுப்பகுதியில் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய மொஹொஜிறின் மிஸ்கின் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.… ( மேலும் படிக்க - Continue Reading )

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள பிரித்தானியா

July 23, 2014 // 0 Comments

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள பிரித்தானியா இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி 614 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் நடைமுறையில், 49.6 மில்லியன் பவுண்கள் ( 79 அனுமதிப்பத்திரங்கள்) மற்றும் 8.1 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கான (49 அனுமதிப்பத்திரங்கள்) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரியவந்துள்ளது. ஏனைய நாடுகளை விட இலங்கைக்கு அதிகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளமை தொடர்பில் குறித்த நாடாளுமன்றக் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் பதிலைப் பெற முயற்சித்து வருகிறது.… ( மேலும் படிக்க - Continue Reading )

27,000 கிலோகிராம் மஞ்சள் மீட்பு

July 23, 2014 // 0 Comments

இந்தியாவிலிருந்து மோசடியான முறையில் 02 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 27,000 கிலோகிராம் மஞ்சளை சுங்க வருவாய் செயலணிக் குழுவினர் மீட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். இது அரிசியென வெளிப்படுத்தப்பட்டு வரியில் 5.6 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.  27,000 கிலோகிராம் மஞ்சளின் பெறுமதி சுமார் 9.5 மில்லியன் ரூபாய் ஆகும். பொருட்களின் மொத்தப் பெறுமதி 10.5 மில்லியன் ரூபாய் ஆகும். வரி மோசடித் தொகை 5.5 மில்லியன் ரூபாய் எனவும் அவர் கூறினார். ஒறுகொடவத்தை களஞ்சியசாலையில், கடந்த 14ஆம் திகதி தூத்துக்குடியிலிருந்து வந்த 20 அடி கொள்கலன்கள் இரண்டை சுங்க வருவாய் செயலணிக்குழுவினர் இன்று புதன்கிழமை காலை சோதனையிட்டனர்.  இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருள் 37,500 கிலோகிராம் அரிசியென வெளிப்படுத்திய இறக்குமதியாளர், 187,500 ரூபாவை மாத்திரம் வரியாக செலுத்தியுள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

நோர்வேஜியர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்கக் கூடாது சு. சுவாமி வழங்கிய ஆலோசனை

July 23, 2014 // 0 Comments

நோர்வேஜியர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று பாஜகவின், மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே சுப்பிரமணியன் சுவாமி, இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

பிரதேச சபையால் திண்மகழிவுகளை அகற்றும் கொள்கலன்கள் அன்பளிப்பு

July 23, 2014 // 0 Comments

மட்.ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு மண்முணைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சி.ஜே.அருட்பிரகாசம் அவர்களால் பாடசாலையின் சுற்றாடல் மாசடைதலை தடுக்கும் வகையிலும், மாணவர் சுகாதார நலன் பாதுகாப்பு கருதியும், திண்மகழிவுகள் அகற்றும் கொள்கலன்களை பாடசாலை அதிபர் கி.தவேந்திரகுமார் அவர்களிடம் நேற்று செவ்வாய் கிழமை கையளிக்கப்பட்டது. இதில் பொறுப்பான அபிவிருத்தி திட்ட உத்தியோகத்தர் திருமதி.சி.தவேந்திரகுமர் ஆசிரிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். Related News :… ( மேலும் படிக்க - Continue Reading )

இலங்கை போர்க்குற்ற விசாரணை குழுவுக்கு விசா வழங்க மறுப்பதா..? மருத்துவர் ராமதாஸ் கண்டனம்..!

July 23, 2014 // 0 Comments

இலங்கைப் போர்க்குற்ற விசாரணை குழுவுக்கு இந்தியா விசா வழங்க மறுத்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடுவதற்கான தீர்மானம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் 16 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. அதிகாரி சாண்ட்ரா பெய்தாஸ் தலைமையிலான இந்த குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதி அளிக்க முடியாது அந்நாட்டு அதிபர் இராஜபக்சே அறிவித்துவிட்ட நிலையில், ஐ.நா. விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.… ( மேலும் படிக்க - Continue Reading )

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

July 23, 2014 // 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை(01-08-2014) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று புதன் கிழமை உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை(22) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 4 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.  பின் குறித்த மீனவர்களை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கோத்தாவுடன் சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை

July 23, 2014 // 0 Comments

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர்.   http://www.puthinappalakai.com/view.php?20140723110939… ( மேலும் படிக்க - Continue Reading )

செல்லக்கிளி அம்மானின் முப்பத்தோராவது நினைவு வருடம் இது!- ச.ச.முத்து

July 23, 2014 // 0 Comments

செல்லக்கிளி அம்மானின் முப்பத்தோராவது நினைவு வருடம் இது!- ச.ச.முத்து தமிழர்கள் என்றாலே தோசை வடை சாப்பிடும் மெல்லியவர்கள். கோழைகள். தொடை நடுங்கிகள் என்ற சிங்களத்தின் நினைப்பை இதற்கு முன்னமேயே 81 அக்டோபர் 15ம் திகதி யாழ் காங்கேசன்துறை வீதியில் முதன்முதலாக சிங்கள இராணுவத்தின் மீது சீலன் தலைமையில் நடாத்தி இருந்தாலும், 1983 மே 18ம் திகதி கந்தர்மடம் பாடசாலையில் சிங்கள அரச இயந்திர தேர்தலுக்காக காவல் காத்த இராணுவத்தினன் மீது தாக்குதல் நடாத்தி இருந்தாலும் இது எல்லாம் ஏதோ தனித்த இராணுவத்தின் மீதான திடீரென்ற தாக்குதலாகவே சிங்களம் நினைத்திருந்தது.… ( மேலும் படிக்க - Continue Reading )

பாலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் இரட்டைவேடம்! – அரசாங்கத்தைச் சாடுகிறார் தயான் ஜெயதிலக

July 23, 2014 // 0 Comments

பாலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் இரட்டைவேடம்! - அரசாங்கத்தைச் சாடுகிறார் தயான் ஜெயதிலக [Wednesday 2014-07-23 07:00] பாலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் இலங்கை அரசாங்கம் முரண்பாடாக நடந்து கொள்வதாக ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜெயதிலக குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜெயதிலக, இலங்கை ஜனாதிபதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இலங்கை அரசாங்கத்தின் அங்கமான வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு சார்பாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஓலைக் கொட்டகையில் பரிட்சை எழுதும் கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள்..!

July 23, 2014 // 0 Comments

ஓலைக் கொட்டகையில் பரிட்சை எழுதும் கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள்..!  [Wednesday 2014-07-23 11:00] வவுனியாவிலிருந்து ஓமந்தை வளியே சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் மிகவும் பின்தங்கிய மீள்குடியேற்றப்பட்ட கிராமம் கள்ளிக்குளமாகும். இக் கிராமத்தின் மாணவர்களின் கல்வியை வலுப்படுத்தும் நோக்கோடு கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. மூன்று ஓலைக் கொட்டகையில் 80 மாணவர்கள் கல்வி கற்கும் மிகவும் பின்தங்கிய பாடசாலை குறித்த பாடசாலையின் அதிபரின் முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒரு வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது.    இப்பாடசாலையில் கடும் வெய்யில்�� காற்றின் காரணமாக் கொட்டகைகளின் கிடுகுகள் ஒவ்வொன்றாக பிடுங்கி எறியப்படுகின்றது.… ( மேலும் படிக்க - Continue Reading )

படையினரைத் தண்டிக்க முனைந்தால் கடுமையாக எதிர்ப்போம்! – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

July 23, 2014 // 0 Comments

  படையினரைத் தண்டிக்க முனைந்தால் கடுமையாக எதிர்ப்போம்! - ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை [Wednesday 2014-07-23 09:00] இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நவநீதம்பிள்ளை நிறுவிய குழுவிற்கு பதிலாக மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசாங்கம் நியமித்தமை அரசாங்கத்தின் தகுதியில்லாத நடவடிக்கை என்று ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில், இந்த செயற்பாட்டின் ஊடாக, இதுவரையிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை அரசாங்கம் மீறியுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

சிறீலங்காவில் மக்களுக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இல்லை – ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம்

July 23, 2014 // 0 Comments

சிறிலங்காவில் உள்ள மக்களுக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டிருந்த 7 கடற்படையினர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குறித்த இரண்டு சிறுமிகளுக்கும் நியாயம் மறுக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்காவில் சட்ட ஒழுங்குகள் சீர்குழைந்துள்ளமையையே எடுத்துக் காட்டுகிறது. அதேநேரம் அந்த சிறுமிகளின் பெற்றோரை கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்த சிறுமிகளால் தங்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்களை அடையாளம் காட்ட முடியாமல் போயுள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஒரே மேடையில்

July 23, 2014 // 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஒரே மேடையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஏன் ஒழிக்க வேண்டும் ? என்ற தலைப்பில் கொழும்பு நகர மண்டபத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கருத்தரங்களில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கருத்தரங்கில் கலந்து கொள்வதாக இவர்கள் அனைவரும் அறிவித்துள்ளனர் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன தெரிவித்தார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

ஆலையடிவேம்பில் பாலர் பாடசாலை ஆசிரியைகள் பங்குபற்றிய ஒருநாள் பயிற்சி நெறி

July 23, 2014 // 0 Comments

(தியாஷினி) ஆலையடிவேம்பு பிரதேச பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகளைத் திசைமுகப்படுத்தும் ஒருநாள் செயலமர்வொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் நேற்று (22) நடாத்தப்பட்டது. பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிச் செயலமர்வுக்கு வளவாளராக திருக்கோவில் கல்வி வலயத்தின் சித்திரக்கலைக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் கலந்துகொண்டு ஆசிரியைகளுக்கான பயிற்சிகளை வழங்கினார். ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்செயலமர்வின்போது பாலர் பாடசாலைக் கற்பித்தலில் பத்து வருடங்களுக்கு அதிகமான காலம் சேவையாற்றும் ஆசிரியைகள் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வளவாளர் உள்ளிட்டோரால் சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கொழும்பில் இளைஞர் ஒருவர் கொலை

July 23, 2014 // 0 Comments

கொழும்பு வெல்லம்பிட்டி சிங்கபுர பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி இவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலொன்னாவ பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

கஞ்சாவை வீசிவிட்டு கான்ஸ்டபிள் தப்பியோட்டம்

July 23, 2014 // 0 Comments

தம்புத்தேகம மாவட்ட நீதிமன்றத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரான கான்ஸ்டபிள் ஒருவர் 3 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட போது, கஞ்சாவை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற கான்ஸ்டபிளுக்கு உதவி செய்ததாக கூறப்படும் கிராம சேவையாளரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர். 410 total views, 410 views today… ( மேலும் படிக்க - Continue Reading )

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 23 இணைப்பாளர்கள்!

July 23, 2014 // 0 Comments

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 23 இணைப்பாளர்கள்! [Wednesday 2014-07-23 09:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இணைப்புச் செயலாளர் ஒருவருக்கு மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மாதமொன்றுக்கு 170 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகின்றது. பெற்றோல் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 30, 000 ரூபா கொடுப்பனவும், 5000 ரூபா தொலைபேசி கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.… ( மேலும் படிக்க - Continue Reading )

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் தோட்டத்தில் சடலம்

July 23, 2014 // 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் கொலைக்குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த ஒருவர் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேற்றாத்தீவில் உள்ள குறித்த நபரின் மரக்கறித்தோட்டத்திலேயே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் நஞ்சருந்தியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன்பாக தனது மாமானார் மீது தாக்குதல் நடத்தியநிலையில் அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் குறித்த நபரை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது அவர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.… ( மேலும் படிக்க - Continue Reading )

மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபர் ஆசிரியை விளக்கமறியல்…

July 23, 2014 // 0 Comments

கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு உதவி செய்த அதிபர் மற்றும் ஆசிரியையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய அமில ஆரியசேன இன்று செவ்வாய்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார் கடந்த 2007.11.12.அன்று குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியை அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த மாணவியினால் கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது.… ( மேலும் படிக்க - Continue Reading )

சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்பந்தன் பதில்

July 23, 2014 // 0 Comments

சிறிலங்கா அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது - தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை. பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்லி 13 வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் படி சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது. அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சிறிலங்காவை இலக்கு வைத்து போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பொய்யானது. இந்தியா விடுதலைப் புலிகளையோ அவர்களின் ஆதரவாளர்களையோ கருத்தில் கொள்ளவில்லை. சிறிலங்கா இராணுவம் ஒருபோதும் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள இரா.… ( மேலும் படிக்க - Continue Reading )

சிறிலங்காவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வழங்கிய ஆலோசனை – நோர்வே தூதுவர் அதிர்ச்சி

July 23, 2014 // 0 Comments

நோர்வேஜியர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று பாஜகவின், மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே சுப்பிரமணியன் சுவாமி, இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் சிறிலங்காவுக்காக நோர்வே தூதுவர் கிறெட் லோசெனும் கலந்து கொண்டிருந்தார். நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    http://www.puthinappalakai.com/view.php?20140723110937… ( மேலும் படிக்க - Continue Reading )

கொலைக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் தேற்றாத்தீவு தோட்டத்திற்குள் சடலமாக மீட்பு- மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

July 23, 2014 // 0 Comments

கொலைக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் தேற்றாத்தீவு தோட்டத்திற்குள் சடலமாக மீட்பு- மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, கோவில் வீதியை சேர்ந்த ரத்னம் கிருஸ்ணபிள்ளை (45வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். தேற்றாத்தீவில் உள்ள குறித்த நபரின் மரக்கறித் தோட்டத்திலேயே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் நஞ்சருந்தியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்பாக தனது மாமானார் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சிறிலங்கா அதிபருக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை

July 23, 2014 // 0 Comments

காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தி, அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலினால், சிறிலங்கா அரசாங்கம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிமுடுவதை அனுமதிக்கும் இந்த சிறப்பு வர்த்தமானியில் திருத்தம் செய்யுமாறு கோரி, அவர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். “இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய மூன்று நிபுணர்கள், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், வெளிநாட்டுத் தலையீடுகள் ஏற்படும். ஒட்டுமொத்த அனைத்துலக நீதிமன்ற முறையே பக்கச்சார்பானது. ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் சுதந்திரமானவர்கள் அல்ல. இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எவர் அறிவுறுத்தியிருந்தாலும், இது ஆபத்தானது. மூன்று அனைத்துலக நிபுணர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், நிறைய பிரச்சினைகள் உருவாகும். சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நியாயப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்தமை தகுதியில்லாத நடவடிக்கை என்று, சிறிலங்காவை ஆளும் கூட்டணியின் மற்றொரு பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள,, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த சிறிவர்ணசிங்க, இந்தக் குழுவை நியமித்ததன் மூலம், இதுவரையிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் மீறியுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளியார் தலையீடுகளுக்கு இடமளிக்காது இருப்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாக இருந்தது. இவ்வாறான விடயங்களை ஆராய்வதற்காக சட்டரீதியான மற்றும் நீதிமன்ற பொறிமுறை தம்மிடம் இருப்பதனால் வெளியாரின் தலையீடு அவசியமற்றது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தது. இந்நிலையில், வெளிநாடுகளை ச்சேர்ந்த நிபுணர்களை நியமித்ததன் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த கொள்கை மற்றும் நிலைப்பாட்டை மீறியுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளியான எங்களுடைய கட்சிக்கு எவ்விதத்திலும் தெளிவுபடுத்தவில்லை. படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அவற்றை ஜாதிக ஹெல உறுமய கடுமையாக எதிர்க்கும். அதேபோல, ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மூவரை நியமித்தமைக்கு ஜாதிக ஹெல உறுமய தம்முடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிபுணர்கள் குழுவை நியமித்தமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு விரோதமாக செயற்படமாட்டோம் – சிறிலங்கா நாடாளுமன்றில் பீரிஸ்

July 23, 2014 // 0 Comments

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலனுக்கு ஊறு விளைவிக்கும் காரியம் எதையும் சிறிலங்கா செய்யாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். திருகோணமலையில், 40 மில்லியன் டொலர் செலவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க சீனாவின் வான்பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத் தாபனத்துக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தக் கட்டுமானத்துக்கும், சிறிலங்கா அனுமதி வழங்காது. விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே, சிறிலங்கா அரசாங்கம் சீனாவுடன் இணங்கியுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கான இடம் குறித்து இன்னமும் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை. விமானங்களைப் பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் சேவைகள் செலவுமிக்கவை. அதற்காக நாம் பெருமளவு பணத்தை வெளிநாடுகளுக்கு கொடுக்கிறோம். இந்த திட்டத்தினால், பெருமளவு நிதியை சேமிக்கலாம், உள்ளூர் பொறியாளர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கும். விமானப் பராமரிப்புத் தளத்தை அமைக்கும் திட்டம், முன்னெடுக்கப்படுகின்ற போதும், அதனைத் திருகோணமலையில் அமைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விமானங்களைப் பராமரிப்பதற்காக அந்நியச் செலவாணி வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுப்பதற்கு, இத்தகைய விமானப் பராமரிப்பு நிலைய வசதி எந்தவொரு நாட்டுக்கும் அவசியமானது. விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது மற்றும் அதற்குரிய வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. அதற்கெனப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்று தான் திருகோணமலை. ஜெட் விமானங்களைப் பராமரிப்புச் சேவை செய்வதற்கு ஏற்ற இடங்களை சிறிலங்கா அரசாங்கம் ஆய்வு செய்தது. ஜெட் விமானங்களை கட்டுநாயக்க, மத்தால, திருகோணமலை ஆகிய தளங்களிலேயே தரையிறக்க முடியும். இவற்றில் பொருத்தமான இடத்தை சிறிலங்கா அரசாங்கமே தெரிவு செய்யும். இது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பிரச்சினைக்குரிய விவகாரமாக எழவில்லை. இந்த திட்டம் பற்றி விபரங்களை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் என்னிடம் கேட்டார். சீனாவுடனான இந்த உடன்பாட்டுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுவது அடிப்படையற்றது. அவர் இது குறித்து சாதாரணமாகத் தான் கேட்டார்.… ( மேலும் படிக்க - Continue Reading )

அசையா சொத்துக்களை மீளப்பெற அரசாங்கம் புதிய சட்டம்

July 23, 2014 // 0 Comments

பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை நேற்று (23) அரசாங்கம் கொண்டுவந்தது. ஆட்சியுரிமை (விஷேட ஏற்பாடுகள்) எனப்படும் இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. இந்த சட்ட மூலம் தொடர்பிலான விவாதம் கட்சி தலைவர்கள் தீர்மானிக்கும் ஒரு திகதியில் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் காரணமாக பலர் தமது காணிகளின் உரிமையை நிலைநாட்ட முடியாது போயிற்று. அந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினையில் சிக்கிகொண்டவர்களுக்கு அவர்களின் (காணி வீடு) உரிமைகளை இந்த சட்டத்தின் மூலம் மீளப்பெற்று கொடுக்கும் .… ( மேலும் படிக்க - Continue Reading )

மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் : யாழில் கையெழுத்து வேட்டை

July 23, 2014 // 0 Comments

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.   இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.   இந்த நிலையில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இல்லை என்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ், சிங்கள மொழிகளடங்கிய  துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது.   அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :-    எமது நாடு இனவாத - மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜூலை மாதம் 23 ஆம் திகதி இன்றையதினம் 31  வருடங்களிற்கு  முன்னர் அன்றைய ஆட்சியாளர்களாலேயே நடந்த கறுப்பு ஜூலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம்.… ( மேலும் படிக்க - Continue Reading )

யாழில் மிருக பாதுகாப்புத்திட்டம்

July 23, 2014 // 0 Comments

யாழ்.மாநகரசபையின் வேலைத்திட்டத்தின் கீழ் மிருக பாதுகாப்புத்திட்டம் ஒன்று யாழில் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.    இந் நிகழ்வானது யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில்  இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.   இந் நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒடெல் நிறுவனமானது தனது என்பார்க் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை மனிதாபமான முறையில் கட்டுப்படுத்துவதுடன் அவற்றால் ஏற்படும் விசர் நாய் கடி போன்ற தீங்குகளில் இருந்து மக்களை பாதுகாப்பது என்பவற்றை நோக்காக கொண்டு தனது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.… ( மேலும் படிக்க - Continue Reading )

வவுனியாவில் விபத்து இருவர் படுகாயம்

July 23, 2014 // 0 Comments

வவுனியா, புதூர் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (23) கன்டர் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 305 total views, 305 views today… ( மேலும் படிக்க - Continue Reading )

அகில இலங்கை ரீதியில் ஸ்கந்தா முதலிடம்

July 23, 2014 // 0 Comments

அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. மர்மமுடிச்சு  எனும் இந்த நாடகத்தை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் பு.கணேசராஜா நெறியாள்கை செய்திருந்தார். இதேவேளை தேசிய ரீதியாக கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டியில்  ஸ்கந்த வரோதயக் கல்லூரியின் நாடகம்  முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய மட்டப் போட்டி கடந்த 20 ம் திகதி ஶ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது.     http://www.onlineuthayan.com/News_More.php?id=733283251923784230… ( மேலும் படிக்க - Continue Reading )
1 2 3 435